வவுனியாவில் 13 வயது சிறுமியை பாலியல்  வன்புணர்விற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

வவுனியாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

வவுனியாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2017 | 10:52 am

2003 ஆம் ஆண்டு வவுனியாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய 55 வயதான ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைதண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கில் 13 வயதான சிறுமியை அவரது தாயின் இரண்டாவது கணவர் இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், எதிரியை குற்றவாளியாக கண்டு முதலாவது குற்றச்சாட்டுக்காக 10 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி அந்தத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளார்.

இதனைத் தவிர தண்டப்பணமாக 10,000 ரூபாவை செலுத்துமாறு குற்றவாளிக்கு உத்தரவிட்ட நீதிபதி அதனை செலுத்தத் தவறினால் ஒருமாத சாதாரண சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது குற்றச்சாட்டுக்காகவும் அதே தண்டனைகளை விதித்து நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச தரப்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் இந்த வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்