English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Nov, 2017 | 8:36 pm
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அண்மையில் குறித்த மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு எதிரான வழக்கினை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் ஒரு சாட்சியாளர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
ஏனைய சாட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த மனு இம்மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
24 Jan, 2021 | 03:32 PM
20 Jan, 2021 | 07:37 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS