பெட்ரோல் தட்டுப்பாடு: பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும்

பெட்ரோல் தட்டுப்பாடு: பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2017 | 12:25 pm

அண்மையில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடிற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டுமென இந்த பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு தெரிவித்துள்ளது.

போதியளவு கையிருப்பை பேண தவறியமை , சப்புகஸ்கந்த கொலன்னாவ மற்றும் முத்துராஜவல ஆகிய களஞ்சியசாலைகளுக்கு எரிபொருளை கொண்டு செல்வதற்கு போதுமான அளவு குழாய்கள் காணப்படாமை எண்ணெய்யை இறக்குவதற்கான ஒரு டக் இயந்திரம் மாத்திரம் கூட்டுத்தாபனம் வசம் காணப்பட்டமை என்பன இந்த தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்ததாக அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தட்டுப்பாடு மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான 8 பரிந்துரைகளையும் அமைச்சரவை உப குழு முன்வைத்துள்ளது.

நீண்டகால கொள்வனவிற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் , சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரித்தல் , திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன இந்த பரிந்துரைகளில் அடங்குகின்றன.

இந்த அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அர்ஜுன ரணதுங்க மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்