தொண்டமான் தொழிற்பயிற்சி நி​லையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு ஸ்டாலின் அதிருப்தி

தொண்டமான் தொழிற்பயிற்சி நி​லையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு ஸ்டாலின் அதிருப்தி

தொண்டமான் தொழிற்பயிற்சி நி​லையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு ஸ்டாலின் அதிருப்தி

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2017 | 10:43 am

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜிற்கு, ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

தொண்டமானின் பெயர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து மாற்றப்பட்டமை, மலையக தமிழர்களை கடுமையான பாதித்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நூற்றாண்டு காலமாக இலங்கையின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இந்திய தமிழர்களின் பங்களிப்பை உதாசினப்படுத்தும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகார பகிர்ந்தளிப்புக்கு ஒத்துழைக்காமலும், போர்க்குற்றம் தொடர்பில் நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்ளாமலும் இந்த விடயங்கள் தொடர்பான ஐ.நாவின் செயற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காமலும் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது மலையகத்திற்காக பாடுபட்டவரின் பெயரை நீக்கி மலையக மக்களையும் இலங்கை அரசு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, பெருந்தலைவர் ஒருவரின் புகழுக்கு கலங்கம் ஏற்படும் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிப்பதோடு, உடனடியாக ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தொண்டமானின் பெயரை மீள சூட்டுவதற்கு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்