சிம்பாப்வே அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது

சிம்பாப்வே அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது

சிம்பாப்வே அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2017 | 11:33 am

சிம்பாப்வே அரசாங்கத்தை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதற்கமைய சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டின் இசெட் பிசி வானொலியை மேற்கோள்காட்டி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

சிம்பாப்வேயின் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களை இராணுவம் மறுத்துள்ளதுடன் சிம்பாப்வே ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்நாட்டின் அரச தொலைகாட்சி மற்றும் வானொலி சேவைகளையும் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கிலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிம்பாப்வே இராணும் அறிவித்துள்ளது.

93 வயதான ரொபட் முகாபே உலகின் வயது முதிர்ந்த தலைவர் என்பதுடன், அவர் 30 வருட காலமாக ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்