கல்வி இராஜாங்க அமைச்சரின் மகனே பணியாளரைத் தாக்கினார்:  செயலாளர் அறிக்கை

கல்வி இராஜாங்க அமைச்சரின் மகனே பணியாளரைத் தாக்கினார்:  செயலாளர் அறிக்கை

கல்வி இராஜாங்க அமைச்சரின் மகனே பணியாளரைத் தாக்கினார்:  செயலாளர் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2017 | 8:50 pm

கல்வி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்குமிடையே பிணக்குகள் ஏற்பட்டதாக வௌியான தகவல்கள் அடிப்படையற்றவை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தகைய சம்பவங்களுடன் கல்வி அமைச்சரின் பிரத்தியேகப் பணிக்குழு உத்தியோகத்தர் எவரும் சம்பந்தப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் மகனும் பிரத்தியேக செயலாளருமான இராதாகிருஷ்ணன் திவாகர்,  அமைச்சின் பணியாளர் ஒருவரை தாக்கியுள்ள சம்பவம் தொடர்பாக குறித்த பணியாளரினால் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நேற்று முன்தினம் (13) அமைச்சின் நிதி மற்றும் நிர்வாக செயலாளருக்கும் கல்வி செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, கடந்த 13 ஆம் திகதி பாலித்த ஹேரத் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்