உள்ளூராட்சி அமைச்சர் வௌியிட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது:  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

உள்ளூராட்சி அமைச்சர் வௌியிட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது:  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2017 | 4:04 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய குழுவின் முதல் பரிந்துரைகளுக்கு முரணாக, உள்ளூராட்சி மன்ற அமைச்சர் நியமித்த உப குழுவின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி ஆறு பிரதேச சபைகளைச் சேர்ந்த ஆறு வாக்காளர்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உப குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கி உள்ளூராட்சி அமைச்சர் வௌியிட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது என தீர்மானித்து அமைச்சர் விடுத்த எல்லை நிர்ணய வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு, கண்டி, ஹாலிஎல, மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 வாக்காளர்களே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்