இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இடர் முகாமைத்துவ நிலையம்

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இடர் முகாமைத்துவ நிலையம்

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2017 | 12:41 pm

கிழக்கு மாகாணத்திலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு இடத்திலோ இயற்கை அனர்த்தம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள அவசியம்  இல்லை என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கடல் மற்றும் கிணறுகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குழப்பமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எவ்வித நில நடுக்கமும் பதிவாகவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதி செய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறினார்.

அத்தோடு நாட்டிற்கு உள்ளேயும் எவ்வித நில நடுக்கமும் பதிவாகவில்லை என புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே மக்கள் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே தமது இருப்பிடங்களிலிருந்து வௌியேறிய மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்புமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை சீராக முன்னெடுப்பதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்