அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் அப்பிள் நிறுவனம் முன்னிலை

அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் அப்பிள் நிறுவனம் முன்னிலை

அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் அப்பிள் நிறுவனம் முன்னிலை

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2017 | 4:23 pm

அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் அப்பிள் நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அப்பிளைத் தொடர்ந்து சீன நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிலும் அப்பிள் நிறுவனம் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு அப்பிள் நிறுவனத்தின் இலாபகரமான காலாண்டாகவும் அமைந்துள்ளது.

மொத்தம் 39 இலட்சம் சாதனங்களை அப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

எல்டிஇ வசதி கொண்ட அப்பிள் வாட்ச் 3 விற்பனை அதிகரிப்பு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து சியோமி மற்றும் ஃபிட்பிட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சியோமி நிறுவனம் சுமார் 36 இலட்சம் சாதனங்களையும், ஃபிட்பிட் நிறுவனம் சுமார் 35 இலட்சம் சாதனங்களையும் விற்பனை செய்துள்ளன.

ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களின் விற்பனை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த சந்தையில் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை இரண்டு சதவிகித சரிவை சந்தித்துள்ளது.

கனாலிஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அப்பிள் நிறுவனம் சுமார் 8 இலட்சம் அப்பிள் வாட்ச் சாதனங்களை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தது. எனினும், இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்