அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2017 | 10:24 am

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானியை வெளியிடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் விலைகள் குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான அறிக்கை நுகர்வோர் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானியை வாழ்க்கை செலவு குழுவில் இன்று சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கை செலவுக்கான குழு பாரளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்