உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2017 | 4:18 pm

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் இந்த வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் அரச அச்சகத்திடம் கையளிக்கப்பட்ட இரண்டு வர்த்தமானிகளில் 2040/56 வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதி தெரிவித்துள்ளார்.

இது பிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான வர்த்தமானியாகும்.

இதேவேளை, அமைச்சினால் கையளிக்கப்பட்ட 2040/57 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் வர்த்தமானியின் பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளதாக அரச அச்சக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானியின் சிங்களப் பிரதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் பிரதி இன்றைய தினத்திற்குள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் வர்த்தமானியின் ஆங்கிலப் பிரதியை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்