வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2017 | 8:46 am

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் இடம்பெறவுள்ளது.

நாட்டின் கடன் சுமையை குறைத்து அபிவிருத்தியை இலக்காக கொண்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்