வத்திக்கானில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்தார் போப் பிரான்சிஸ்

வத்திக்கானில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்தார் போப் பிரான்சிஸ்

வத்திக்கானில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்தார் போப் பிரான்சிஸ்

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 4:40 pm

வத்திக்கான் நகரில் சிகரெட் விற்பனைக்கு போப் பிரான்சிஸ் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

வத்திக்கான் நகரானது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்நகர் போப்பின் ஆளுமையின் கீழ் உள்ளது. வத்திக்கானுக்கு அன்றாடம் இலட்சக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் புகைப்பதால் ஆண்டுக்கு சுமார் 70 இலட்சம் பேர் வரை உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தகவல் தெரிவித்தது. மேலும், வத்திக்கான் நகரில் ஓராண்டிற்கு 72 கோடி ரூபா மதிப்பிலான சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஒரு தகவலும் வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த போப் பிரான்சிஸ், மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கச்செய்யும் செயலில் புனித நகரான வத்திக்கான் ஈடுபடாது என அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, வத்திக்கான் நகரில் சிகரெட்டுகள் விற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

போப் பிரான்சிஸின் இந்த உத்தரவு மூலம், வத்திக்கான் நகரின் வருவாயில் ஆண்டொன்றுக்கு 72 கோடி ரூபா இழப்பு ஏற்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்