பெட்ரோல் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பு

பெட்ரோல் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பு

பெட்ரோல் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2017 | 8:39 am

ஒரு வாரத்திற்கு பின்னர் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நெவெஸ்கா லேடி கப்பலில் கொண்டுவரப்பட்ட பெட்ரோல் பொது களஞ்சிய தாங்கியில் இறக்கப்பட்டு நேற்று பிற்பகல் முதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் இன்று முதல் வழமை போன்று பெட்ரோலைப் பெற்றுக்கொள்ள முடியும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியப்படுத்தல் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்தார்.

லங்கா ஐஓசி நிறுவனத்தினால் கொண்டு வரப்பட்ட பெட்ரோல் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டு இருந்தது.

இதேவேளை, நாட்டில் பெட்ரோலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளை, டீசல் விநியோகத்தையும் நிறுத்திய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

குற்றவாளிகளாக அடையாளங்காணப்படும்பட்சத்தில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மற்றுமொரு எரிபொருள் கப்பலொன்று நாளைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர, இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பலொன்று எதிர்வரும் ஓரிரு தினங்களில் நாட்டை வந்தடையும் எனவும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்