நுண் கடனிலிருந்து வட மாகாண, மலையக மக்களை மீட்குமா நீலப்பசுமை வரவு செலவுத் திட்டம்?

நுண் கடனிலிருந்து வட மாகாண, மலையக மக்களை மீட்குமா நீலப்பசுமை வரவு செலவுத் திட்டம்?

நுண் கடனிலிருந்து வட மாகாண, மலையக மக்களை மீட்குமா நீலப்பசுமை வரவு செலவுத் திட்டம்?

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 8:40 pm

நுண் கடன் திட்டத்தினால் வட மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் நியூஸ்பெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

அவர்களைப் போன்று அதிக வட்டி வீதம் கொண்ட நுண் கடனால் மலையக மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலாப நோக்கத்திற்காக மாத்திரம் செயற்படும் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், வறுமையிலுள்ள மக்களை இலக்கு வைத்து தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் கடினமாக இருப்பதனால், நுண் கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்கள் தமது செயற்பாட்டை இலகுவாக முன்னெடுத்துச் செல்கின்றன.

வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களுக்கு கடன் வழங்கும் இந்நிறுவனங்கள், அவர்களின் நிலை அறியாது மிக சூட்சுமமான முறையில் அதிக வட்டி வீதத்தில் கடனை அறவிடுகின்றன.

பெரும்பாலான நிறுவனங்கள் 22 வீதத்திற்கு அதிக வட்டி வீதத்தில் நுண் கடன்களை வழங்கி, வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களை மேலும் ஏழ்மைப்படுத்துகின்றன.

குறைந்த வருமானத்தைப் பெறும் பெருந்தோட்ட மக்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நுண் கடன்களைப் பெறுகின்ற போதிலும், அதுவே அவர்களின் வாழ்க்கையை நெருக்கடிக்கு இட்டுச்செல்கின்றன.

நுண் கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில், 2018 ஆம் ஆண்டிற்கான நீலப்பசுமை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிராமிய கூட்டுறவு வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களினூடாக பாதிக்கப்பட்டவர்களை கடன்களிலிருந்து மீட்பதற்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண் கடன் நிதி நிறுவனங்களின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டெடுப்பதற்கு துரிதமாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்