தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம்

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம்

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 9:01 pm

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாக கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க தெரிவித்தார்.

நியூஸ்பெஸ்ட்டுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க தெரிவித்ததாவது,

[quote]நாட்டை உலுக்கிய மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான மோசடி குறித்த ஆரம்ப அறிக்கையின் பெரும் பகுதியை கணக்காய்வாளர் திணைக்களமே தயாரித்தது. இதனால் அது சக்திமிக்க அறிக்கையாக அமைந்தது. அதனையடுத்து நிலக்கரி சுரங்கம் தொடர்பில் அறிக்கையொன்றைத் தயாரித்து சமர்ப்பித்தோம். அது குறித்து இதுவரை பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற 15 மில்லியன் ரூபா நட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பித்தோம். இதுபோன்று பல்வேறு அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தோம். எனினும், அவற்றிற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு 19 ஆவது திருத்தச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை வேறொரு சட்டமூலத்தினால் நீக்குவதற்கான அதிகாரமில்லை. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அது சட்டரீதியற்றதாகும். [/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்