திருகோணமலையில் குழாய் நீர் கட்டமைப்பு திருத்தத்தின் போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

திருகோணமலையில் குழாய் நீர் கட்டமைப்பு திருத்தத்தின் போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

திருகோணமலையில் குழாய் நீர் கட்டமைப்பு திருத்தத்தின் போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 3:50 pm

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் குழாய் நீர் கட்டமைப்பு திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த போதே நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மண்மேடு சரிந்ததில் காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முள்ளிபொத்தானையைச் சேர்ந்த ஒருவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு ஊழியர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்