செவ்வாய் கிரகத்திற்கு சிலிக்கான் சிப்பில் பெயர்களை அனுப்ப ஒரு இலட்சம் இந்தியர்கள் பதிவு

செவ்வாய் கிரகத்திற்கு சிலிக்கான் சிப்பில் பெயர்களை அனுப்ப ஒரு இலட்சம் இந்தியர்கள் பதிவு

செவ்வாய் கிரகத்திற்கு சிலிக்கான் சிப்பில் பெயர்களை அனுப்ப ஒரு இலட்சம் இந்தியர்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 5:00 pm

2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லவுள்ள நாசாவின் இன்சைட் விண்கலத்தில் தங்கள் பெயர்கள் அடங்கிய சிலிக்கான் சிப்பை அனுப்ப 1 இலட்சம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை மாற்றம், தண்ணீர் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா மங்கல்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

இதேபோன்று நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து ஆய்வு செய்ய மேலும்மொரு விண்கலம் அனுப்பப்படவுள்ளது.

அந்த விண்கலத்தில் மனிதர்களின் பெயர்களை சிலிக்கான் சிப்பில், தலைமுடியை விட சிறிய அளவில் எழுதி, அதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவர்.

அதற்காக பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பெயர்களை இணையம் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதுமிலிருந்து 24 இலட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து மாத்திரம் 1 இலட்சம் பேர் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா இந்த வரிசையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

பல்வேறு செயற்கைக்கோள்களை பல பில்லியன் டொலர்களில் உருவாக்கி செவ்வாயில் நாசா ஆய்வு செய்து வரும் நிலையில், மனிதர்களை அங்கு குடியேறச் செய்யும் திட்டம் நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்