அமெரிக்கா – சீனா இடையே 253.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்கா – சீனா இடையே 253.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்கா – சீனா இடையே 253.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 4:25 pm

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் 253.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் வர்த்தகம் என்று சொல்லப்பட்டாலும் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகின்ற வடகொரியாவை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆசிய தலைவர்களுடன் ஆலோசிப்பதும் வடகொரியாவுக்கு எதிராக அவர்களை ஒன்றுதிரட்டுவதும் தான் ட்ரம்பின் உண்மையான நோக்கமாக அமைந்துள்ளது.

ஜப்பான், தென் கொரியாவிற்கான பயணங்களை முடித்துக்கொண்ட ட்ரம்ப், நேற்று முன்தினம் (08) சீன தலைநகர் பீஜிங்கை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போர்பிட்டன் சிட்டி என்று அழைக்கப்படுகின்ற பீஜிங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் ட்ரம்புக்கு 21 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சீன பாராளுமன்ற அரங்கில் ஜனாதிபதி ட்ரம்பும் சீன அதிபர் ஜின்பிங்கும் நேற்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.

ட்ரம்ப், ஜின்பிங் சந்திப்பின்போது, அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையே 253.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்