வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2017 | 1:03 pm

27 பேர் கொல்லப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த தாக்குதல், கொலை முயற்சியுடன் திட்டமிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கைக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அரச அதிகாரிகளும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை தகுந்த ஆதாரங்களூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மூவரடங்கிய குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மூவரடங்கிய குழுவின் உறுப்பினரான ஓய்வு பெற்ற நிருவாக அதிகாரி சட்டத்தரணி எஸ்.கே. லியனகே தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 கைதிகள் காயமடைந்தனர்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலரும் இதன்போது காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்த போதிலும் இதுவரை விசாரணை அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்