நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் மாதிரிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பம்

நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் மாதிரிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பம்

நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் மாதிரிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2017 | 10:22 am

நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் நாட்டை வந்தடைந்துள்ள நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் மாதிரிகளின் ஆய்வறிக்கை இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் கிடைக்கும் என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வறிக்கை கிடைத்ததன் பின்னர் கப்பலிள்ள பெட்ரோலை கொள்களன்களிற்கு இறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய இன்று மாலைக்குள் கப்பளிலுள்ள பெட்ரோல், எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விநியோகிக்கப்படும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்கு பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள முத்துராஜவளை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நாடளாவிய ரீதியில் காணப்படும் எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்