இறுதி யுத்தத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு: விசாரணை இடம்பெற்றது

இறுதி யுத்தத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு: விசாரணை இடம்பெற்றது

இறுதி யுத்தத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு: விசாரணை இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2017 | 7:11 pm

இறுதிப்போரின் போது காணாமற்போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் எஸ்.சுதர்சனன் தலைமையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கின் 5 பேர் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணம் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்துமூல சமர்ப்பணம் தொடர்பான நீதவான் அறிக்கை மாவட்ட மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஆட்கொணர்வு மனுவின் ஏனைய வழக்குகள் தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு கோரி இந்த ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட சரணடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரினால் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்