பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கும் மக்கள்

பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கும் மக்கள்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2017 | 1:25 pm

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தரும் எரிபொருள் கப்பல் இந்தியாவின் கோவா பகுதியை கடந்து பயணிப்பதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய நாளை தினம் (08) குறித்த கப்பல் நாட்டை வந்தடையும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் நாளை மறுதினம் சந்தைகளுக்கு பெட்ரோலை விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெட்ரோலை பெற்றுக்கொள்ளும் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை, இன்று முதல் வாகனங்களுக்கு மாத்திரம் பெட்ரோலை விநியோகிப்பதற்கு பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான சுற்றுநிரூபத்தை இன்று வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பெட்ரோலை கொள்வனவு செய்வதற்காக இன்றும் சில பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக திருகோணமலை, கிண்ணியா உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வாறான நிலைமையே தொடர்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்