பலத்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

பலத்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2017 | 1:17 pm

வறட்சியை தொடர்ந்து, வட மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருவதால், யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த 125 பேரில் சுமார் 70 பேர் வரை வள்வெட்டித்துறை – புளிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே பாலாவி நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

இதேவேளை இவர்கள் யுத்த காலத்தில் பலாலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்