தொலஸ்பாகையில் பாலம் உடைந்தமையால் போக்குவரத்து பாதிப்பு

தொலஸ்பாகையில் பாலம் உடைந்தமையால் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2017 | 7:28 am

தொலஸ்பாகையில் இருந்து நாவாலப்பிட்டி மற்றும் கம்பளைஆகிய நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையின் கலமுதுன சந்தியில் அமைந்துள்ள பாலம் நேற்று உடைந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்திற்கு முற்றாக தடை ஏற்பட்டுள்ளது.

இந்த பாலமூடாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையிருந்தும் அதனையும் மீறி வாகனங்கள் செல்வதனால் ஏற்படும் அதிர்வினால் பாலம் உடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி நாகஹவத்தவை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்