அரியாலையில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட தம்பதியினர் கைது

அரியாலையில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட தம்பதியினர் கைது

அரியாலையில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட தம்பதியினர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2017 | 11:58 am

யாழ்ப்பாணம் அரியாலையில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அரியாலை நெடுங்குளம் பகுதியில் சந்தேகநபர்பகள் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து நாணயத்தாள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இயந்திரங்கள், மடிக்கனணி, 5000 போலி நாணயத்தாளகள்- 400 , 1000 போலி நாணயத்தாள்கள் – 168 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேநபர்களான 26 வயதான ஆணும், 19 வயதான பெண்ணும் இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்