முல்லைத்தீவில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முல்லைத்தீவில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முல்லைத்தீவில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 8:48 pm

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில், விசுவமடு, உடையார்கட்டு, துணுக்காய், மாந்தை போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் தொடர்ந்தும் இடை விலகி செல்கின்றமை அதிகரித்த வண்ணமுள்ளது.

பின் தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களே இடைவிலகுகின்றமை தரவுகள் ஊடாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதிகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பாடசாலைக்கு செல்வதில் காணப்படும் போக்குவரத்து பிரச்சினைகள், பாடசாலை உபகரணங்கள் இன்மை என்பன முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த வடுக்களை அதிகம் சுமந்த மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்