யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் முச்சக்கரவண்டியுடன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் முச்சக்கரவண்டியுடன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 6:42 pm

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பஸ்ஸிலிருந்த 47 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்த 49 பேரும் புத்தளம், சிலாபம் மற்றும் முந்தல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 27 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையிலும், 9 பேர் சிலாபம் வைத்தியசாலையிலும், 8 பேர் முந்தல் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் பின்னர், சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதில் இருவர் தீவிர கண்காணிப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்