தரமற்ற எரிபொருளுடன் வந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது

தரமற்ற எரிபொருளுடன் வந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 10:04 pm

IOC நிறுவனத்தால் இலங்கைக்கு தரமற்ற எரிபொருளைக் கொண்டுவந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

டோர்ம் அஸ்ட்ரீட் என்ற குறித்த கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது.

எனினும், பெட்ரோலின் தரம் தொடர்பில் எழுந்த சிக்கல் காரணமாக 17 ஆம் திகதி கப்பலைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்மதி தரவுகளுக்கு அமைய, கடந்த 29 ஆம் திகதி அளவில் இந்த கப்பல் தங்காலை கடற்பரப்பில் காணப்பட்டது.

எனினும், மெரைன் ட்ரஃபிக் இணையத்தளத்திற்கு அமைய, அன்று முதல் இந்த கப்பல் செய்மதி கட்டமைப்புடனான தொடர்பிலிருந்து விடுபட்டது.

இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் பயணிக்கும் இந்த கப்பல் இன்று பிற்பகல் திருகோணமலை உள்ளக துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது.

 

மேலதிக தகவல்களை காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்