சைட்டம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு நியமனம்

சைட்டம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு நியமனம்

சைட்டம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 8:43 pm

மாலபே சைட்டம் நிறுவனம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 9 பேர் கொண்ட குழுவொன்றை இன்று நியமித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மருத்துவ பீடங்களின் விரிவுரையாளர்கள் சங்கம், மருத்துவ மாணவர்களின் பெற்றோர்களின் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஒருவரும் 9 பேருக்கு மேலதிகமாக அந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மருத்துவப் பீட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உண்ணாவிரதங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்