குருணாகலில் நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் மீது தாக்குதல்

குருணாகலில் நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 10:17 pm

குருணாகலில் நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் மீது கடை உரிமையாளர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருணாகல் பஸ் நிலையத்தில் சிறுவன் ஒருவனும் வயதான ஒருவரும் அழுதுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதற்கான காரணத்தை நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் வினவியுள்ளார்.

குருணாகல் நகரிலுள்ள CD கடை உரிமையாளர் ஒருவர் தம்மை இரும்பினால் தாக்கி, தம் மீது மிளகாய்த்தூள் வீசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் முன்னதாக வாங்கியிருந்த CD ஒன்றினை மாற்றச் சென்றிருந்த போது, பின்னர் வருமாறு கடைக்காரர் கூறியுள்ளார்.

அதனையடுத்து, அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த குறித்த கடைக்காரரிடம் சம்பவம் தொடர்பில் வினவுவதற்காக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் சென்றுள்ளார்.

இதன்போது குருணாகல் பிராந்திய செய்தியாளரான A.W.M.ஃபஸ்லான் மீதும் கடைக்காரர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் A.W.M.ஃபஸ்லான் குருணாகல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக தாக்குதலுக்குள்ளான குருணாகல் – உக்கமுவ, மாதொட்டை பகுதியைச் சேர்ந்த 42 வயதான H.A.D.ஜோசப் உபாலி ஹேரத் என்ற நபர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் குருணாகல் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்