உமா ஓயா திட்டத்தினால் கினிகம பகுதியில் சுமார் 400 வீடுகளில் வெடிப்புகள் எற்பட்டுள்ளன

உமா ஓயா திட்டத்தினால் கினிகம பகுதியில் சுமார் 400 வீடுகளில் வெடிப்புகள் எற்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2017 | 8:26 am

உமா ஓயா திட்டத்தினால் பண்டாரவளை கினிகம பகுதியில் சுமார் 400 வீடுகளில் வெடிப்புகள் எற்பட்டுள்ளன.

பண்டாரவளை, பொரோகலகந்த, கல்கந்த, வலஸ்பெத்த, மற்றும் கினிகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வீடுகளிலேயே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இவற்றில் 175 வீடுகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

வெடிப்பு ஏற்பட்டு அபாயம் நிலவும் வீடுகளில் தங்குவதற்கு அச்சமடைந்துள்ள மக்கள், தங்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கு வேறு இடங்களை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் தவறவிட்டதாக மக்கள் தெரிவிவத்துள்ளனர்.

உமா ஓயா திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக இன்று மீண்டும் ஆய்வுகள் தொடரவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டள்ளது.

மூன்று பிரதேச செயலகங்களிலுள்ள பகுதிகளை உள்ளடக்கி ஒரு விசேட குழு ஆய்வு செய்து வருவதாக அதன் உதவி இயக்குநர் இந்திக்க புஷ்பகுமார கூறியுள்ளார்.

வெலிமட, பண்டாரவெல மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்கட்ட பிரதேசங்களிலே இவ்வாறு ஆய்வுசெய்யப்படவுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழக புவியியலாளர்கள் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்