English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Nov, 2017 | 8:06 pm
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
நாளாந்த கேள்வியை பூர்த்தி செய்வதற்கு தேவையான பெற்றோல் கையிருப்பிலுள்ளதாக, பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
எவ்வாறியினும், பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை வௌியிட்டுள்ளன.
கடந்த மூன்றாம் திகதி பிற்பகலிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதுமானளவு பெற்றோல் விநியோகிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டது.
எவ்வாறாயினும், சில பகுதிகளில் வழமைப் போன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதையும் இன்று அவதானிக்க முடிந்தது.
ஐ.ஓ.சி நிறுவனத்தினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல் தாமதமடைந்தமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு நேற்று அறிக்கையொன்றினூடகத் தெரிவித்தது.
எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெற்றிக்தொன் பெற்றோலைக் கொண்டுவரும் கப்பல், சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெரிடைம் சேர்விஸ் நிறுவனம் குறிப்பிடும் வகையில், இன்று மாலை அரபிக்கடலை கடந்துள்ளது.
அத்துடன், ஐ.ஓ.சி நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல் செய்மதி தரவுக்கமைய, கடந்த மாதம் 29ஆம் திகதி தங்காலை கடற்பரப்பை வந்தடைந்துள்ளது.
தற்போது அந்தக் கப்பல் திருகோணலை துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
09 Jan, 2021 | 03:47 PM
11 Jul, 2018 | 06:12 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS