தூய்மையான அரசியலை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

தூய்மையான அரசியலை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2017 | 7:58 pm

தேர்தலின்போது, மக்கள் தெரிவு செய்ய வேண்டியவர்கள் தொடர்பில் பொலன்னறுவையில் ஜனாதிபதி இன்று கருத்து வௌியிட்டார்.

[quote]ஜனாதிபதி திருடினால், ஜனாதிபதிக்கு கீழுள்ளவர்கள் திருடுவார்கள். அமைச்சர் திருடினால், அமைச்சருக்கு கீழுள்ளவர்கள் திருடுவார்கள். அது, கீழ் மட்டத்தை நோக்கி வியாபிக்கும். மாகாண சபை, பிரதேச சபையிலுள்ளவர்களும் அதனை பின்பற்றுவார்கள். ஊழல், மோசடி, திருட்டு, வீண் விரயம் என்பன அரசியல்வாதிகளுக்கு ஏற்புடையவையல்ல. இவற்றிலிருந்து விடுபட்டால் மாத்திரமே அரசியல்துறை வலுவடையும். நாட்டின் ஆட்சி வலுப்பெறும். தூய்மையாக பணிகளை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். தேசிய வளங்கள், அரச வளங்கள், அரச சொத்துக்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து அரசாங்கம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். தூய்மையான அரசியலை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்