தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமனம்

தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2017 | 7:36 pm

சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வௌிநாடு சென்றுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தப்புல டி லிவேரா எதிர்வரும் 16 ம் திகதி வரை பதில் சட்ட மா அதிபராக செயற்படவுள்ளார்.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உதவி புரியும் சட்டத்தரணிகள் குழுவின் தலைவராகவும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்