எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று நாளை மறுதினம் நாட்டிற்கு வரவுள்ளது

எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று நாளை மறுதினம் நாட்டிற்கு வரவுள்ளது

எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று நாளை மறுதினம் நாட்டிற்கு வரவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2017 | 3:57 pm

நாளாந்த தேவைகளுக்காக மாத்திரம் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் கப்பலொன்று நாளை மறுதினம் (07) நாட்டை வந்தடையும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது சுமார் 9,000 மெற்றிக்தொன் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பிலுள்ளதாகவும் பெற்றோலிய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் சுமார் 1800 மெற்றிக்தொன் முதல் 2000 மெற்றிக்தொன் எரிபொருள் தேவைப்படுகின்றது.

எனினும் சிலர், பெற்றோலை களஞ்சியப்படுத்துவதற்கு முற்படுவதால், நாளாந்தம் தேவைப்படும் 2000 மெற்றிக்தொன் எரிபொருளை மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மக்கள் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கொழும்பின் பல பகுதிகளில் இன்றும் பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்