இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்

இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2017 | 7:30 pm

முல்லைத்தீவு நகரில் இன்று நடைபெற்ற, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக் கிளை தெரிவுக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ்.சிவமோகன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு மோதல் ஏற்பட்டதை அங்கிருந்த ஒருவர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த மோதல் ஆரோக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து அவ்வாறு அமைந்திருந்தாலும், கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் மோதல் வீதி வரை நீடித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்