3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 3:48 pm

மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று அதிகாலை 4.30 க்கு குறித்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அவர்களின் பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 766 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

54 வயதுடைய குறித்த நபருடன் 30 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்