மல்லிகைத்தீவில் சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆறாவது சந்தேகநபர் மீண்டும் கைது

மல்லிகைத்தீவில் சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆறாவது சந்தேகநபர் மீண்டும் கைது

மல்லிகைத்தீவில் சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆறாவது சந்தேகநபர் மீண்டும் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 3:06 pm

திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறாவது சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர் வழக்கில் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் நேற்று முன்தினம் (30) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லிகைத்தீவு – பெருவெளி பகுதியில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்