நியூயார்க்கில் பாதசாரிகள் செல்லும் பாதையில் ட்ரக் நுழைந்து தாக்கியதில் 8 பேர் உயிரிழப்பு: ட்ரம்ப் கண்டனம்

நியூயார்க்கில் பாதசாரிகள் செல்லும் பாதையில் ட்ரக் நுழைந்து தாக்கியதில் 8 பேர் உயிரிழப்பு: ட்ரம்ப் கண்டனம்

நியூயார்க்கில் பாதசாரிகள் செல்லும் பாதையில் ட்ரக் நுழைந்து தாக்கியதில் 8 பேர் உயிரிழப்பு: ட்ரம்ப் கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 5:10 pm

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பாதசாரிகள் செல்லும் பாதையில் ட்ரக் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ட்ரக் ஒன்று பாதசாரிகள் செல்லும் பாதையில் தாறுமாறாக ஓடி எதிரில் வந்தவர்களை தாக்கியது. மேலும், பாடசாலை பேருந்தின் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த மோசமான தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட நபர், ட்ரக்கில் இருந்து இறங்கி கையில் இருந்த போலித் துப்பாக்கியைக் கொண்டு மக்களை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பிடித்துள்ளனர்.

பிடிபட்டுள்ள நபர் 29 வயது இளைஞர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவம் என்று கூறியுள்ள நியூயார்க் நகர மேயர், பிடிபட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த 8 பேர்களில் 5 பேர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்