சுண்டுவில்லால் கல்லொன்றை அடிக்க முடியாதவர்கள் பாராளுமன்றத்தை தாக்க முடியுமா: அனுரகுமார கேள்வி

சுண்டுவில்லால் கல்லொன்றை அடிக்க முடியாதவர்கள் பாராளுமன்றத்தை தாக்க முடியுமா: அனுரகுமார கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 7:52 pm

பாராளுமன்றம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என விமல் வீரவன்ச கூறிய கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றும் கருத்துக்கள் வௌியிடப்பட்டிருந்தன.

குறைந்தபட்சம் சுண்டுவில்லால் (கெட்டபோல்) கல்லொன்றை அடிக்க முடியாதவர்கள், பாராளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள முடியுமா என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, தம்மீது தாக்குதல்கள் எவையும் மேற்கொள்ளப்படுமா என பல முறை தொலைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருந்தவர்களே தற்போது பாராளுமன்றம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

விமல் வீரவன்சவிற்கு எதிராக அவரது கட்சியின் தேசிய அமைப்பாளரே குற்றம் சுமத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவர் தொடர்பில் பல விடயங்கள் வௌிக்கொணரப்படும் என பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்