ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ரஞ்சன் ராமநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ரஞ்சன் ராமநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ரஞ்சன் ராமநாயக்க நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 4:22 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று பெற்றுக்கொண்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக அண்மைக்காலமாக குரல் கொடுத்து தாம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக தம்மை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு சிலர் அழுத்தம் பிரயோகித்திருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்