அல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

அல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

அல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 3:42 pm

நேற்று (31) இரவு அல்பிட்டிய – படபொல, ஈரிகஹதொல பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய மற்றும் படகொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்துக் கொண்டிருந்த தந்தை, அவரது இரு மகன்கள் மற்றும் மகள் மீது நேற்றிரவு 7 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று வயது பிள்ளையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் படபொல பகுதியைச் சேர்ந்த 45 வயதான அசங்க மனோராஜ் சொய்சா என்பவரே காயமடைந்துள்ளார்.

அவரின் 3 வயது, 13 வயது, 7 வயது பிள்ளைகள் காயமடைந்துள்ளதுடன் காரின் சாரதியும் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் விசேட படையினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்