அரிசி, பருப்பின் விலையைக் குறைக்க இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் நடவடிக்கை

அரிசி, பருப்பின் விலையைக் குறைக்க இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் நடவடிக்கை

அரிசி, பருப்பின் விலையைக் குறைக்க இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 4:04 pm

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசி மற்றும் பருப்பின் விலையைக் குறைப்பதற்கு இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 78 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் நாட்டரிசி 74 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அதிகாரிகள் இந்த விடயங்களை அறிவித்தனர்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 148 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் லக் சதொச தெரிவித்துள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் புதிய விலைகளுக்கு அமைய அரிசியும் பருப்பும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்