மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

By Sujithra Chandrasekara

06 Nov, 2017 | 8:07 am

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறிவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாண சபை எல்லை நிர்ணய குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

5 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழு கடந்த மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

மாகாண சபை தேர்தல் தொகுதிகளில் எல்லைகளை வகுப்பது குழுவின் நோக்கமாகும்.

கடந்த இரண்டாம் திகதி வரை, குறித்த குழுவினரால் மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக மக்களிடமிருந்து எழுத் துமூலமான கருத்துக்களை பெற்றுக்கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் எஸ் ரத்நாயக்க தெரிவிததார்.

மாகாண சபை எல்லை நிர்ணய குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கொண்ட அறிக்கையை 4 மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.