பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும் அமெரிக்க நடிகைக்கும் அடுத்த ஆண்டு திருமணம்

பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும் அமெரிக்க நடிகைக்கும் அடுத்த ஆண்டு திருமணம்

By Bella Dalima

29 Nov, 2017 | 4:14 pm

பிரிட்டன் இளவரசரான ஹரிக்கும், அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மேர்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹரி. கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மேர்க்லேவும் காதலித்து வந்தனர்.

இந்த ஜோடிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.

ஹரி அடுத்த இளவேனிற்காலத்தில் திருமணம் செய்துகொண்டு, லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நாட்டிங்ஹாம் மாளிகையில் வசிக்கவுள்ளார்.