நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

By Bella Dalima

17 Nov, 2017 | 3:59 pm

நுவரெலியா – ஹாவா எலிய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹாவா எலிய பகுதியிலுள்ள மின்சார சபைக்கு அருகிலிருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாவா எலிய – கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பெரியசாமி சியாமளா எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பெண்ணின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.