நியூ கலேடோனியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூ கலேடோனியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

By Bella Dalima

20 Nov, 2017 | 3:46 pm

நியூ கலேடோனியா அருகே தெற்கு பசுபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவிகளின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் நியூ கலேடோனியா மற்றும் அருகிலுள்ள வனுவாட்டு பகுதிகளை நோக்கி சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வௌியேறுமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூ கலேடோனியாவில் ஆரம்பத்தில் 82 கிலோமீட்டர் (51 மைல்கள்) தொலைவில், கிழக்கில் 10 கிலோமீட்டர் (6 மைல்கள்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் நாடுகளின் கடற்பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இது கடந்த 12 மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய நிலநடுக்கம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.