தேங்காய்க்கு 75 ரூபாவை கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்க இந்த வாரத்திற்குள் நடவடிக்கை

தேங்காய்க்கு 75 ரூபாவை கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்க இந்த வாரத்திற்குள் நடவடிக்கை

By Sujithra Chandrasekara

28 Nov, 2017 | 6:53 am

தேங்காய்க்கு 75 ரூபாவை கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்க இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெங்கு பயிர்செய்கை நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவுக்கான குழுவில் அதிகரித்துச் செல்லும் தேங்காயின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க தீர்மானித்துள்ளதாக தெங்கு பயிர்செய்கை நிலையத்தின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதற்கான நடவடிக்கைகள் நுகர்வோர் சேவை அதிகாரசபையினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது சந்தையில் தேங்காய் 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய் விற்பனையில் ஈடுபடும் இடைத்தரகர்கள் அதிக இலாபத்தை ஈட்டும் நோக்கில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாக பொய் பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக தெங்கு பயிர்செய்கை நிலையத்தின் தலைவர் கபில யகந்தாவல மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 85 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன் இந்த விலையதிகரிப்பின் காரணமாக நுகர்வோர் அதிக இன்னல்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.