ஓகி புயலால் கன்னியாகுமரியில் நால்வர் உயிரிழப்பு

ஓகி புயலால் கன்னியாகுமரியில் நால்வர் உயிரிழப்பு

By Bella Dalima

30 Nov, 2017 | 9:25 pm

தமிழகத்தைத் தாக்கியுள்ள ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியகுமரி அருகே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது.

இந்தப் புயல் தற்போது கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக மணிக்கு சுமார் 65 கி.மீ முதல் 75 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதுடன் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், ஓகி புயல் காரணமாக தண்டவாளங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதால் கன்னியாகுமரியிலிருந்து புறப்படவிருந்த அனைத்து விரைவு ரயில் போக்குவரத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.